உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு…!

(எம்.ஆர்.எம்.றாசித்)

கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 இலட்சத்து 86 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால்  இன்றைய நாளில் மாத்திரம்  பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 801 பேர் உலக அளவில் கண்டறியப்பட்டுள்ளதுடன், 491 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

மேலும், கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா பதிவுசெய்யப்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா  வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை  5 இலட்சத்து 33 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆயிரத்து 580 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஸ்பெயினில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 27 பேரும், இத்தாலியில் 1 இலட்சத்து 52 ஆயிரத்து 271 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!