இரண்டாம் தவனைக்காக மே 11 இல் அனைத்துப் பாடசாலைகளும் திறப்பு !

(எம்.ஆர்.எம்.றாசித்)

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 20 ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த திகதி எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாடசாலை மாணவர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!