கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கௌரவம்

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு தமது உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராது முன்னின்று செயற்பட்டு வரும் அனைவருக்கும் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இன்று (11) பிற்பகல் 6.45க்கு தாமரை கோபுரம் ஒளியூட்டப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.

சவாலான சந்தர்ப்பத்தில் அனைத்து மக்கள் மத்தியிலும் தைரியத்தை ஏற்படுத்தி, முழு உலகிற்கும் முன்னுதாரணமாக மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் அனைத்து பாதுகாப்பு தரப்பினர், அரச நிர்வாக பொறிமுறைக்குட்பட்ட அனைத்து அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய பல ஊழியர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அனைவருக்கும் மக்களினதும் நாட்டினதும் கௌரவம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!