327 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு !

(எம்.ஆர்.எம்.றாசித்)

கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சுமார் 327 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 260 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 56 கிலோகிராம் ஐஸ்ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்  இசுறு  சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக  இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த  கப்பலொன்றை சோதனையிட்ட போது குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன்  குறித்த கப்பலில் பயணித்த ஈரான்  பிரஜைகள்  ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!