கல்முனையில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தப்படுத்தும் பணி !

சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றி நோயை தடுக்கும் நோக்கில் அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கி விசிறும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை டவுன் ஜூம்மா பள்ளி தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளருமான அப்துல் ரஸ்ஸாக் (ஜவாத்) அவர்கள தனது சொந்த நிதியில் தொற்று நீக்கி விசிறப்படும் வேலை திட்டம் இன்று முதல் ஆரம்பம்.

இன் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் MIM.அப்துல் மனாப்,கல்முனை பொலிஸ் நிலைய சிரேஷ்ட பரிசோதகர் சம்சுதீன்,உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!