சம்மாந்துறையில் கசிப்பு கோடாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது !

பாறுக் ஷிஹான்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள  வேளையில் கசிப்பு காய்ச்சும் கோடாவினை தன்வசம் வைத்திருந்த ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்விற்குட்பட்ட வீரமுனை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக வியாழக்கிழமை(9) சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட போலீஸ் குழுவினர் தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது வீரமுனை பகுதியை சேர்ந்த 56 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை 6 லீட்டர் கோடாவுடன் கைதானார்.

இவ்வாறு கைதானவரை நாளை(10) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!