கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 1.5 கோடி முகக்கவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத்  தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்து. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 25 லட்சம் என்- 95 முகக் கவசங்கள் வாங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது. 1.5 கோடி முகச்கவசங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.
வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை பரிசீலிக்கப்படும். கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களே தனிமைப்படுத்தக்கொள்வதுதான். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.
கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. கொரோனா விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்வது என்பது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!