கொரோனா கிட் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு இலவச வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க இரவு பகலாக பாடுபடும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு  கொரோனா கிட்  இலவச  வழங்கி வைக்கப்பட்டது.

இருட்டு வட்டம் நண்பர்கள் அமைப்பின் ஊடாக சம்மாந்துறையை சேர்ந்த எம் எஸ் பசீல் ஹாஜியாரின்  ஏற்பாட்டில் அரச சட்டவாதி சட்ட முதுமாணி  எம்.ஏ.எம். லாபிரின்  தலைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 50 கொரோனா கிட் இலவசமாக திங்கட்கிழமை(30)   வழங்கி வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்,  எம் எஸ் பஸீல் ஹாஜியார்  , இருட்டுவட்ட நண்பர்கள் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!