யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை மீளஆரம்பித்தது

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுருந்ததன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது

எனினும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கைகள் திரும்பியிருக்கும் நிலையில், போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புகையிரநிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!