ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது.

அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி, உலமா சபை தலைவர் மற்றும் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் முதல் உரை நிர்வாக சபையின் தலைவர் டாக்டர். இப்றாலெப்பே அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

இலங்கையிலும் இந்த தொற்று நோய் இனங்காணப்பட்டுள்ளதால்
இந்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தி கொரோனா தொற்றுக் கிருமியை – உச்ச அர்ப்பணிப்புடன் எதிர்த்துப் போராடி நிற்கும் எமது நாட்டின் முன்னரங்கப் பணியாளர்களாகிய – சுகாதார சேவையினர், காவல்துறையினர், முப்படையினர் அவர்களை கடமையில் அமர்த்தி மக்களை பாதுகாக்கும் இத்திட்டம் மிகவும் வரவேற்கதக்கதாகும். இத்திட்டத்திற்கும் நாட்டின் சட்டத்திற்கும் துனை போவது எம் அனைவரினதும் கடமைப்பாடாகும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாளாந்தம் கூலி வேலை செய்து வரும் மக்கள் பொருளாதாரரீதியில் பொரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வெளியில் சென்று வேலை செய்யும் பட்சத்தில் நோய் தொற்று உள்ளாக்கப்படுவதாலும் , நாட்டின் சட்டத்துக்கு மதிப்பளித்து வெளியில் செல்வதை தடுப்பதனாலே இந்நிலை உருவாக காரணமாக அமைந்தது எனவே இந்நிலையில் பொருளாதார மட்டத்தில் பிந்நிலையில் உள்ளவர்களை இனங்கண்டு இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு (26.03.2020) மஸ்ஜிதுல் ஜமாலியா பள்ளிவாசலில் இடம் பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்

அதேபோன்று போக்குவரத்துச் சேவையினர், நுகர்வோர் சேவையினர், ஊடகத் துறையினர் மற்றும் ஏனைய அனைத்து அரச மற்றும் அரசு-சாரா பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய ஹனீபா சேர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடும் போது இத்திட்டமானது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்றாகும் எனவே இவ்வாறான பின்தங்கிய நிலையில் வாழும் இம்மக்களை இனங்கண்டு சேவையாற்றிய சம்மாந்துறை நிர்வாக சபைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அதே போனறு இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களும் தேவையுடைய இம்மக்களை இனங்கண்டு சேவையாற்றிய சம்மாந்துறை நிர்வாக சபைக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மேலும் நாட்டின் சட்ட ஒழுங்கு முறைக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
நாட்டின் எந்த பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வேளைகளில் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாக எப்போதும் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொள்ளுகின்றது எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ள விடயங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

01. தவிர்க்க இயலாத அத்தியாவசி தேவையின் போது மட்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்

02. அலுவலகங்கள், கடைகள், பேரூந்து வண்டிகள், புகையிரதங்கள் போன்ற பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியை கட்டாயமாகப் பேண வேண்டும். முடிந்தவரை அடுத்த ஆட்களிலிருந்து ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தை நீங்கள் பேணிக்கொள்ளுங்கள்.

3. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே அருகிலுள்ள கடைக்குச் செல்லுங்கள்.

04. வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே கடைகளுக்கு செல்லுங்கள்.

05. வழங்கப்பட்டிருக்கும் சுகாதார ஆலோசனைகளை எப்போதும் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். பொது இடங்களிலோ, அல்லது தனிமையில் இருக்கும் போது கூட – இருமல் அல்லது தும்மல் வந்துவிட்டால் – அறிவுறுத்தப்பட்டுள்ள வகையில் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.

06. வயதானவர்கள், அவசியமற்ற எந்த காரணத்தைக் கொண்டும், வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். வயதானவர்களை வீட்டுக்கு வெளியில் யாரும் அனுப்பாதீர்கள்!

07. கடையில் பொருட்களை வாங்கும் போது – அடுத்தவரில் இருந்து ஒரு மீட்டர் இடைவெளி தூரத்தைப் பேணுங்கள்!

08. பொருட்களை வாங்கும்போது நீங்கள் கடையில் செலவிடும் நேரத்தைக் குறைத்து – சன நெரிசலில் கழிக்கும் காலத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள்!

09. கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் – கடைகளுக்குள் நெருக்கமாக அதிகமானவர்களை வரவிடாதீர்கள்!

10. வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பிய உடன் – அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உங்களைப் பூரணமாகச் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்!

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப் பகுதியில் – வீடுகளில் இருந்து, வீட்டு வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!