பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்து 76 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவை மீறிய 3 ஆயிரத்து 76 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவினை மீறி செலுத்தப்பட்ட 771 வாகனங்களும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 6 மணிவரையிலான ஆறு மணித்தியால காலப்பகுதிக்குள் மாத்திரம் ஊரடங்கு உத்தரவினை மீறிய 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 வாகனங்களும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!