இப்போது செய்யாமல் இனி எப்போது செய்வது !

பிரபல தொழிலதிபரும் − அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாவிதன்வெளி அமைப்பாளரும் − அம்பாரை மாவட்ட செயற்குழு பிரதி தலைவருமான சித்தீக் நதீர் அவர்களால் இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவாலும் − ஊரடங்குச் சட்டத்தினாலும் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள நாவிதன்வெளி பிரதேசத்தின் வாழும் 75 குடும்பங்களுக்கு நதியுதவி வழங்கப்பட்டது

இதில்#NTv முகநூல் தொலைக்காட்சியின் தலைவர் ULM. நதீர் அவர்களின் வேண்டு கோளுக்கமைய 12ஆம் கொலனி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த சுமார் 26 குடும்பங்களுக்கு இன்று (26) நிதியுதவி செய்யப்பட்டது.

அம்பாரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய − வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் வாழும் பிரதேசங்களில் நாவிதன்வெளி பிரதேசமும் ஒன்றாகும்.

வாக்களிக்கப் பிறந்தவர்களாக , கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட இப் பிரதேசத்தை , சித்தீக் நதீர் sir அவர்கள் எப்போது தத்தெடுத்தது போன்று இம் மக்களுக்கு அனைத்து செயற்பாடுகளிலும் உறுதுனையாய் நிற்க முன்வந்தாரோ அன்று முதல் இப் பிரதேச மக்கள் சிறந்த விழிப்புணர்வை அரசியல் உட்பட அனைத்திலுமே அடைந்து விட்டார்கள் என்றால் அது மிகையாகாது.

அரசியல் பிரமுகராக இருந்தும் கூட − இன்னுமே சித்தீக் நதீர் அவர்களுக்கு − அவர் இப் பிரதேசத்துக்கு ஆற்றியுள்ள பணிக்காக இப் பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள் நன்றி என்ற கைமாறைச் செய்யவில்லை. அதைக் கூட அவர் எதிர்பார்த்ததும் இல்லை.

ஆனால் , எமது வாக்குகளை காலம் காலமாக பெற்று வந்த எந்தவொரு அரசியல்வாதியும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எம்மை எட்டிக் கூட பார்க்கவில்லை என்பது இங்குள்ள மக்களைப் பொறுத்தவரை ஆறாத் துயராகும். இதன் மூலமும் − எமக்கொன்று என்றால் முதலில் யார் வருவார் என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள இறைவன் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துவிட்டான்.

வாக்குச் சேகரிப்பதற்காக மட்டுமே வரும் அரசியல்வாதிகள் − தற்காலத்தில் தொழிலின்றி அவதியுறும் எங்களை ஏறெடுத்தும் பார்க்காத இன்றைய சூழ்நிலையில் சித்தீக் நதீர் sir இன் உதவி, இங்குள்ள மக்களுக்கு பெரும் ஆறுதலை தருவதாகவே அமைந்துள்ளது.

சித்தீக் நதீர் Sir அவர்களுக்காக − உதவி பெற்ற குடும்பங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஊருமே நன்றி செலுத்துவதோடு − அவருக்காகவும் அவரது குடும்பத்துக்காகவும் இறைவனை இறைஞ்சுவதோடு − அவரது தொழில் துறைகள் மென்மேலும் பறக்கத் அடையவும் பிரார்த்திக்கிறோம்..

இன்னும் பல குடும்பங்களுக்கான உதவிகளை செய்ய தயாராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Contact No
0756203628

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!