ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.


(எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாறை மாவட்டத்தில் இன்று (26) வியாழக்கிழமை காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.

குறிப்பாக கல்முனை மருதமுனை,பாண்டிருப்பு,சாய்ந்தமருது, பகுதியில் பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்து பொலிசார் சீர் செய்வதை அவதானிக்க கூடியதாகவிருந்து .

கல்முனை பொது சந்தையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை பொது சாந்தான்கேணி மைதானத்தில் மரிக்கறி வியாபார நிலையங்கள் தற்காலிகமாக
காணப்பட்டதுடன்

மேலும் வியாபார நிலையங்கள்,பொது சந்தைகள் ,சுப்பர்மார்க்கெட்டுகள்,பாமசிகள் ,வங்கிகள் ,எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களில் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.

இதேவேளை தொடர்ந்தும்கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார நிலையங்களில் பாதுகாப்பு பிரிவினர் மக்களை ஒழுங்கு படுத்தி வருவதுடன்
கல்முனை தொடக்கம் மாளிகை காடு வரையுள்ள கடற்கரை வீதிகளில் மீன்கள் ,மரக்கறி வியாபார நிலையங்கள் அதிகம் காணப்பட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!