சம்மாந்துறை பிரதேச சபையின் சகல பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு தவிசாளாரின் பணிப்புரைக்கமைவாக 5000.00 ரூபாய் சம்பள முற்கொடுப்பனவு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சம்மாந்துறை பிரதேச சபையின் பதிலீட்டு மற்றும் நாளாந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை கவனத்தில் கொண்டு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் பணிப்புரைக்கமைவாக சம்பளத்தின் முற்பணமாக 5000.00 ரூபாய் வங்கியில் வைப்பு செய்துள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுபூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இதனால் பிரதேச சபையில் நாளாந்த மற்றும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளமையை கவனத்தில் கொண்டே உணவு மற்றும் அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் இந்த விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந் கொடுப்பனவானது சகல பதிலீட்டு மற்றும் நாளாந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்படுள்ளதாகவும் நாளை திங்கட் கிழமை இதனை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து நிந்தர ஊழியர்களுக்கும் சம்பளம் வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!