ஸாஹிர் மௌலானா பௌன்டேசன் இன் விசேட போக்குவரத்து ஏற்பாடு தொடர்பான அறிவித்தல்

தற்போதய ஊரடங்கு நிலை நாளை மீளவும் நீடிக்கப்படும் சாத்தியம் உள்ளதால் எமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலனோம்பு விடயங்களின் ஒரு அங்கமாக ஸாஹிர் மௌலானா பௌன்டேசன் ஊடாக வைத்தியசாலைகளுக்கு மக்கள் சென்று வருவதற்கான விசேட அனுமதியுடன் இலவச வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான அவசியமான பயணங்கள் , மருத்துவ தேவை கருதிய பயணங்களுக்காக வாகன வசதி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதுடன்,

திடீர் சுகவீன நிலை மற்றும் வைத்திய ஆலோசனை என்பவற்றிற்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் நிலை ஏற்படின் எந்நேரமும் இலவச முச்சக்கர வண்டி சேவையினையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆகவே தேவையுடையவர்கள் மாத்திரம், ஏனையவர்களும் பயனடையக் கூடிய வகையில் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு எமது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்…

அவசர வாகன தொடர்புகளுக்கு … 0774525659 எனும் இலக்கத்திற்கு அழைக்கவும்.

ஸாஹிர் மௌலானா பௌன்டேசன்,
புகையிரத நிலைய வீதி,
ஏறாவூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!