Breaking | அதிகரிக்கும் நோயர்களின் எண்ணிக்கை ! மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் !!

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அதேபோல், ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!