சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேர அவசர தொலைபேசி !

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக, 1912 எனும் விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இத்தோலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இத்தோலைபேசி இலக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர COVID-19 நோய் தொடர்பில் தொடர்பு கொள்ள பொலிஸ் தலைமையகத்தை, பின்வரும் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
011 244 4480
011 244 4481
011 597 8730
011 597 8734
011 597 8720

பொதுவான சுற்றுலா தொடர்பான விபரங்களுக்கு
011 242 6900

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான அவசர தொலைபேசி
1912

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!