கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் !

பாறுக் ஷிஹான்
கோரானா வைரஸ்  தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அம்பாறை கல்முனை பகுதியில் அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனது கருத்தில்

கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு முஸ்லீம் மரணித்தால் கூட இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய முடியாது.ஏனென்றால் இந்த நோயை எந்த வகையிலும் அலட்சியப்படுத்த முடியாது.இந்த நோய் பரவாமல் இருக்க மக்களை விழிப்புணர்வுடன் இருக்க அழைப்பு விடுக்கின்றேன்.

அரசாங்கத்திற்கு எனது வேண்டுகோள் யாதெனில் அன்றாடம் தொழில் செய்து வருமானம் ஈட்டும் மக்களுக்கு ஒரு உணவு  நிவாரணப்பொதி ஒன்றினை வழங்க  pனாதிபதி பிரதமர் முன்வர வேண்டும் என வேண்டு கோள் விடுக்கின்றேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!