புதிய 1000 ரூ. நாணயத்தாள் வெளியீடு

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினவைபவத்தை முன்னிட்டுஇ புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றை இலங்கை மத்திய வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை உத்தியோகப்பூர்வமாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்தார்.
மேலும் இந் நாணயத்தாளில் 4 மத ஸ்தலங்கள் அச்சிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

5 மில்லியன் எண்ணிக்கை கொண்ட நாணயத் தாள்கள ; வெளியிடப்படவுள்ளதுடன் தாளின் திகதி 2018.02.04 ஆகும்.
ஞாபகார்த்த நாணயத்தாள் 06.02.2018 இலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படவுள்ளது. அதேநேரம் ஆரம்பத் தொடர் இலக்கங்களுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான நாணயத் தாள்கள் கவர்ச்சிகரமான மடிப்பொன்றில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ரூ.1,300 இற்கு இல.54, சதம் வீதி, கொழும்பு 01 இல் அமைந்துள்ள பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையிலும் மத்திய வங்கியின் அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, திருகோணமலை மற்றும ; கிளிநொச்சி பிரதேச அலுவலகங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!