எரிபொருள் விலைக்கான நிலையான நிதியம் – அரசாங்கம் தீர்மானம்

எரிபொருள் விலைக்கான நிலையான நிதியம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளது அரசாங்கம் கொள்கை ரீதியாக இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். மசகு எண்ணெயின் விலையை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு நிலையாக பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் தளம்பல்கள் ஏற்பட்டாலும், அதன் விலை ஒரே மட்டத்தில் பேணப்படவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதாரத்தில் உருவாகியுள்ள மந்த போக்கின் காரணமாக பொருளாதாரத்தில் உள்ள இடர்நிலையை கவனத்தில் கொண்டு மத்தியகால தேசிய தீர்வு தொடர்பில் ஈடுபடவேண்டிய நிலைமை பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தற்பொழுது உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை குறைவை கவனத்தில்கொண்டு உரிய பயனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபணர்களின் கருத்துக்களை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 வீதி நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொது மக்களைப் போன்று தனியார் வாகன போக்குவரத்தை இலகுபடுத்துவதை நோக்காக கொண்டு தற்பொழுது சந்தையில் எரிபொருள் விலையை அதேபோன்று முன்னெடுத்தல்.

 எரிபொருள் இறக்குமதியில் அரசாங்கத்துக்கு இலாபத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இறக்குமதி வரியை விதித்தல்.

 சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவினால் கிடைக்கப்பெறும் தொகையை பயன்படுத்தி எரிபொருள் நிலைப்படுத்திய நிதியத்தை அமைத்தல் மற்றும் 6 மாத காலப்பகுதிக்குள் 200 பில்லியனை இந்த நிதியத்திற்குள் திரட்டுதல்.

 இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை குறைக்கக்கூடிய வகையில் இந்த நிதியத்தில் 50 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மக்கள் வங்கிக்கும் இலங்கை வங்கிக்கும் செலுத்தவேண்டிய கடன் நிலுவையை தீர்த்தல்.

 எரிபொருள் விலை குறைப்பை கவனத்தில் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் ஒரு லீட்டர் 70 ரூபா வீதம் இலங்கை மின்சார சபைக்கு வழங்குதல் அதன் மூலம் அனல் மின்நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுக்கு செலவாகும் 30 மில்லியன் ரூபாவிலும் பார்க்க குறைத்து வங்கி கடன் மற்றும் வட்டி தொகையை தீர்த்தல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!