அதிர்ச்சி தகவல்… கொரோனா நோய் வந்து இறந்ததன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள் தெரியுமா.?

ஒருவருக்கு கொரோனா நோய் வந்து இறந்ததன் பின்னர் அவரது உடலை என்ன செய்வார்கள்?” என்று ஒருவர் கேட்டார். உண்மையில் கொடுமையிலும் கொடுமையான இறுதிக் கணம் அது.

இதன் படிமுறை பின்வருமாறு அமையும்.

கொரோனா என்று உறுதிப்படுத்தப்பட்டவரது உடலம் உடனடியாக வைத்தியசாலையின் பிரத்தியேக பிணவறைக்கு மாற்றப்படும்.

உடலத்தை மிகமிக குறைந்தபட்ச கையாளுகை (அருகில் செல்வதை முடிந்தவரை தவிர்த்தல்)

உடலத்தின் வெளிப்புற பரிசோதனை எதற்குமே இடமளிக்கப்படாது.

மிக மிக நெருங்கிய உறவினர்கள் (பெற்றோர், சகோதரர்) மட்டுமே பாதுகாப்பான பார்வைக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கென வைத்தியசாலையில் முற்கூட்டியே பாதுகாப்புமிக்க இடம் தயார்ப்படுத்தப்படும்.

பிரேத பரிசோதனை (Autopsy), உள்ளுறுப்பகற்றல் (Embalming) எதுவுமே இல்லை.
உடலம் பிணப்பையில் (Body Bag) வைத்து சீல் வைக்கப்படும்

சீல்வைக்கப்பட்டபின் உடலம் எக்காரணம்கொண்டும் பார்வைக்கு வைக்கப்படாது.

பிணப்பையில் வைத்து சீல்வைக்கப்பட்ட உடலம் இதற்கென்றே தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து இறுதி மரியாதைக்காக சீல்வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகளுக்காக உடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்படாது. வீட்டிற்கு கொண்டுசெல்லவும் முடியாது.

இறந்து 24மணித்தியாலத்துள் உடலம் மின்சாரத் தகனம் செய்யப்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!