முழு நாட்டையும் முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை – ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக முழு நாட்டையும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டுகருத்து தெரிவித்த அவர் வௌிநாடுகளில் இருந்து வருவோரை பெரும்பாலும் தடுத்துள்ள நிலையில், அனைவரையும் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் தீர்மானத்தை விரைவில் எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

மார்ச் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரையில் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து  வந்த மூவாயிரம் பேரில்   1500 பேர்  இதுவரையில்  அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களையும் அவர்கள் இருக்கும் இடங்களைத் தேடிச்செல்லும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பொதுமக்கள் வீட்டினுள் இருப்பதால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் நோய்த்தொற்று தொடர்பாக எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்படுபவர்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவலை வௌியிட்டார்.

தொற்றுக்குள்ளானவர்களை ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி கண்காணித்தால் இலகுவில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டார்.

இதேவேளை இந்தியாவிற்கு மதயாத்திரை சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டு வருதற்கான  நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!