திருகோணமலை விபத்தில் அவுஸ்திரேலியர் இருவர் கடும்காயம்

திருகோணமலை உட்துறைமுக வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய பல்கலைக்கழக யுவதிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் இன்று (29) மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கல்வி தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக திருகோணமலை வந்த அவுஸ்திஶேலியா யுவதிகள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது தன்னுடைய தொலைபேசியில் செல்பி எடுத்தவேளை முன்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளனர். மேலும் இவ்விபத்து இடம்பெற்றதுடன் துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!