கொழும்பில் பல வீதிகள் முடப்படும்

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி 70 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு கொழும்பில் பல வீதிகள் நாளை முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையிலும், அடுத்த மாதம் 1ம் திகதியிலிருந்து 3ம் திகதி வரையும், காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக காலி வீதியில், காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்று வட்டம் வரையான வீதியில் வாகனப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!