விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் ஆரம்பித்த தனது உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை (30) நிறைவுசெய்துள்ளார்.

இவர் கடந்த ஒன்பது நாளாக மேற்கொண்ட குறித்த உண்ணாவிரத போராட்டத்தை, சிகிச்சை காரணமாக நிறைவுக்கு கொண்டுவந்துள்ளார்.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரி குறித்த உண்ணாவிரத போராட்டத்தை இவர் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்திருந்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!