குழப்பங்கள் ஏற்பட்டால் உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்படும்

தேர்தல் நடத்த முடியாத அளவிற்கு குழப்பநிலை அல்லது வேறேதும் பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இது குறித்து கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சேவைகளை பகிஷ்கரித்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் நடத்தமுடியாத குழப்பநிலை ஏற்படும் பட்சத்தில் மூன்று மாத காலத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!