அம்பாறை மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் – இஷாக் எம்.பி!

அம்பாறை மாவட்ட மக்கள், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பேராதரவு வழங்கி, இன, மத பேதங்களின்றி முஸ்லிம் சமூக நலனில் அக்கறை கொண்டு தொழிற்பட்டு வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். இஷாக் கேட்டுக்கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கருகில் முன்னாள் நீதிபதி கலாநிதி ஏ.எல். ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே  இவ்வாறு கூறினார். அவர்  மேலும் கூறியதாவது,

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு, அம்பாறை மாவட்ட மக்கள் சுமார் 33 000 வாக்குகளை வழங்கினர். ஆனால் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

சிறுபான்மையினருக்கு பிரச்சினை என்று வரும்போது, முதன் முதலில் குரல் கொடுப்பதும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் பேசுவதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகத்தான் இருக்கும். இதனை கடந்த காலங்களில் மக்கள் நிதர்சனமாக உணர்ந்திருப்பீர்கள். இதனால் அவரை பேரினவாதிகள் மாற்றுக்கண் கொண்டு பார்க்கின்றனர். தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றனர்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுராதபுரம் மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் தலைவர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் ஒற்றுமைப்பட்டுள்ளதனால் நன்மையடைந்து வருகின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அதிகம் சிந்திக்கும் தலைவராக அமைச்சர் ரிஷாத் மிளிர்கின்றார். அம்பாறை மாவட்ட மக்கள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாற்றமடைந்த சரித்திரங்கள் அதிகமுள்ளன. முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் ஏமாறாது, இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ_க்கு வாக்களித்து ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!