சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து

சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பிலான புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்கி தெரிவித்தார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இராணுவ மரியாதை வேட்டுக்களுக்கு பின்னர் சிங்கப்பூர் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

இருவரும் நட்புறவுடன் உரையாடிய பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதன் பின்னர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை தொடர்பாக சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சந்தைகளில் பல துறைகளில் அதிக அனுகூலங்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.

இலங்கை தெரிவு செய்யப்பட்ட சிங்கப்பூரின் 80 ஏற்றுமதி பொருட்களுக்கு வரி சலுகையை பெறும் இதனுடாக வரித்துறையின் ஒவ்வொரு வருடமும் சுமார் 10 மில்லியன் டொலர்களை வரியாக சேமிக்க முடியும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

குறைந்த வரி சலுகையில் சிங்கப்பூரிலிருந்து தரமான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதிகள் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த சிங்கப்பூரிலுள்ள இலங்ககைக்கான தூதுவர் நிமல் வீர ரத்ன இரு நாட்டு அரசாங்கங்களும் நவீன பூரணமானதும் உயர் பெறுமதி கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இரண்டு அரசாங்கமும் உடன்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை மூலம் தாராள பொருளாதாரம் மற்றும் சேவைகள் தொடர்பிலான இலங்கை மூதலீடுகள் அதிகரிக்கும் என்றும் இதன் ஊடாக உற்பத்தி மற்றும் சேவைகளும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இந்த உடன்படிக்கை உண்மையிலேயே சிறு மற்றும் நடுத்தர தொழிற்துiயில் இலங்கையில் கூடுதலான மூதலீடுகளுக்க வழி வகை செய்யும் என்று தெரிவித்தார்.

அந்த உடன்படிக்கை மூலம் இரட்டை வரி தவிர்ப்பும் ஜனவரி மாதத்தில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!