சிறுபான்மைக்கு இடமில்லாத கட்சி எமக்கு தேவையில்லை – எம்.ஏ. ஹஸன்அலி

சிறுபான்மைக்கு ஐ.தே.க.வில் இடமில்லை என்பதாலேயே கட்சியை விட்டு வெளியேறினேன். அநீதிக்கு நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன் என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி முன்னாள் அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன்அலி தெரிவித்தார்.


ஐ.தே.க. விலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தமை குறித்து ‘நியூஸ் பிளஸ”க்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. மக்கள் நலன்பேனாவிடின் அக் கட்சியிலிருந்து பலனில்லை. நான் என்னுடைய ஆரம்ப காலம் தொட்டே ஐக்கிய தேசிய கட்சிக்காக உழைத்து வந்தேன். இருந்த போதிலும் ஐ.தே.க.வினர் சிறுபான்மையினருக்கு சரியான இடம் வழங்குவதாக இல்லை.

சிறு சிறு இனவாதக் கட்சிகளுக்கு எமது சமூகத்தை அடகு வைக்க முனைகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாட்சி என்கின்ற போர்வையில் எமது சமூகத்துக்கு அநியாயமிழைக்கின்றனர். இது போன்ற நாசகார, மனிதாபிமானமற்ற காரணங்களினாலேதான், நான் அந்தக் கட்சியை விட்டு வெளியேறி ஜனாதிபதி அவர்களுடன் கைகோர்த்துள்ளேன்.

இது எனக்காக எடுத்த முடிவல்ல. எனது மக்களுக்காக எடுத்த முடிவாகும். எனது ஊருக்கு இதற்கு முன்னரும் பல அபிவிருத்திகளை ஒரு அமைப்பாளராக இருந்து வழங்கியது போல், இன்னும் பல அபிவிருத்திகளை இந்த மாற்றத்தினுடாக வழங்கவுள்ளேன். – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!