நடமாடும் விபச்சர விடுதி சுற்றிவளைப்பு – கல்கிசையில் சம்பவம்

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கல்கிச பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த நடமாடும் விபச்சார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த விபச்சார விடுதியை நடாத்திச் சென்ற நபர் ஒருவரும், இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏற்ப பெண்களை விநியோகிப்பதும், சிலபோது வாகனத்திலேயே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இந்த நடமாடும் விடுதியை நடாத்தியவர்களின் நடவடிக்கையாக இருந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!