கொழும்பில் பாரிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், கொழும்பு மக்கள் அநாதரவாகவே உள்ளனர்! -NFGG யின் தலமைத்துவ சபை உறுப்பினர் ஹனான் ஹுஸைன்

கொழும்பில் பாரிய கட்டடங்களும்ஹோட்டல்களும் கட்டப்படுகின்றபோதும்கொழும்பு மக்களின் உண்மையான பிரச்சினைகளைக் கண்டறிந்துஅவற்றைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் தவிறயுள்ளார்கள். எனவேகொழும்பு மக்கள் அநாதரவாக உள்ளனர் என்று NFGG யின் (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) தலமைத்துவ சபை உறுப்பினரும்கொழும்பு மாநகர சபை வேட்பாளருமான ஹனான் ஹுஸைன் தெரிவித்தார். 

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்நாம் கொழும்பு மக்களின் தேவைகளைப் புரிந்துஅதற்கேற்றாற் போல் நிலைத்து நிற்கும் அபிவிருத்திகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். எனவேமோசமான அரசியல்வாதிகளை கடிந்து கொள்வதோடு நின்றுகொள்ளாமல்சிறந்த வேட்பாளர்களுக்கு பொது மக்கள் வாக்களிக்க வேண்டும்.

கொழும்பு மக்களின் சுகாதாரம்சந்தோசமான வாழ்வுகல்வி என்று எல்லாத் துறைகளுமே கவனிப்பாறற்றுக் கிடக்கின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால்கொழும்பு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் அரசியல்வாதிகள கொழும்பு மக்களின் தேவைகளை சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவேகொழும்பு மக்களின் அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்ப்பதுவே எமது முக்கிய இலக்காக இருக்கின்றது.

இந்த மாநாகர சபைத் தேர்தலில் எமது NFGG கட்சி முதல் தடவையாகப் போட்டியிடுகின்றது. எனினும்எமது வேட்பாளர்கள் கடந்த இரு தசாப்தங்களாக சமூக விவகாரங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்களே. எனவேகொழும்பு மக்களின் பிரச்சினைகளை சரிவரப் புரிந்த வேட்பாளர்களே எமது கட்சியில் களமிறங்கியுள்ளனர்.

நாம் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்புகின்றோம். எனவேவிளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுபோதிய வாழ்க்கை வசதிகள் இல்லாத மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட விரும்புகின்றோம். கொழும்பு மாநகர சபை ஊடாகபொது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை வினைத்திறனாக வழங்க விரும்புகின்றோம்.

கொழும்பின் எல்லாப் பக்கங்களிலும் மிகவும் சிறிய வீடுகளில் பல குடும்பங்கள் வாழ்கின்ற நிலையே காணப்படுகின்றது. இக்குடும்பங்கள் வாழ்விடங்களின்றி மிகவும் கஷ்டப்படுகின்றன. இவர்களுக்கான வீடுகள்குடியிருப்புக்கள் ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது.

இன்னுமொரு புறத்தில் கொழும்பு இளைஞர்கள் பயனுள்ள வகையில் ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்கான வாய்ப்புக்கள் கொழும்பில் இல்லை. சிறுவர் பூங்காக்கள்போதிய மைதான வசதிகள் இல்லாமையினாலேயேசில இளைஞர்கள் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.

எனவேகொழும்பு மக்களின் வாழ்க்கையை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்குசில அடிப்படையான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருக்கின்றது. இதில் நாம் அதிக அக்கறையுடன் செயற்படுவோம் – என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!