காத்தான்குடியில் NFGG யின் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு

(அஷ்கர் தஸ்லீம்)

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், NFGG சார்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு இன்று (24) காத்தான்குடியில் நடைபெற்றது. இம்மாநட்டின் விசேட அம்சங்களாக NFGG யின் வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை விளக்கம் மற்றும் அதனடிப்படையிலான சத்தியப் பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.

இத்தேசிய மாநாடு இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. அதாவதுகிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக களமிறங்கும் உறுப்பினர்களுக்கான மாநாடு இன்று நடைபெற்றது. கிழக்குக்கு வெளியிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் களமிறங்கும் உறுப்பினர்களுக்கான மாநாடு சில தினங்களில் கொழும்பில் நடைபெறும்.

இன்று நடைபெற்ற தேசிய மாநாட்டில், NFGG யின் கொள்கைகள்இலக்குகள்வழிமுறைகள்தேர்தல் பிரசார ஒழுங்குகள் மற்றும் ஒழுக்கங்கள்வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சத்தியப் பிரமாணம் போன்றன குறித்த விரிவுரைகளும்செயலமர்வுகளும் நடாத்தப்பட்டன..

இத்தேசிய மாநாட்டில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான்பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்பொதுச் செயலாளர் நஜா முஹம்மத்தேசிய அமைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்களும்கட்சியின் மூத்த உறுப்பினர்களும் விரிவுரைகளையும்செயலமர்வுகளையும் நடாத்தினர்.

நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலுமுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களிலும்கொழும்பு மாநகர சபைபுத்தளம் நகர சபைமுசலி பிரதேச சபைஅத்தனகல்ல பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களிலும் NFGG தனித்துப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!