என் இறுதி மூச்சி இருக்கும்வரை எனது பணி தொடரும் – முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

(பைஷல் இஸ்மாயில்)

அதிகாரப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் மக்களுக்குச் செய்யும் சேவையிலிருந்து என்னை ஓய்வுபெற வைக்க முடியாது. என் இறுதி மூச்சி இருக்கும்வரை எனது பணி தொடரும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் 7 இலட்சம் ரூபா நிதியின் மூலம் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 250 வறிய குடும்ப பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (22) அட்டாளைச்சேனை அல்- முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றபோது அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், இறக்காமம், அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், தீகவாபி, ஆலங்குளம், சம்புநகர், நிந்தவுர், சாய்ந்தமருது, சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை போன்ற பிரதேசங்களில் வாழும் மிக வறிய குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் நோக்கில் வருடா வருடம் வாழ்வாதார உதவி வழங்கும் இத்திட்டத்தை நான் முன்னெடுத்து வருகின்றேன். இவ்வாறு செய்து வரும் இத்திட்டத்ததை எனது இறுதி மூச்சி இருக்கும்வரை நான் செய்து வருவேன்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எனது அமைச்சின் கீழ் இருந்த சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடகா இத்திட்டத்தை மாகாணம் முழுவதும் அமுல்படுத்தி செய்து வந்தேன். இதனை இன மத பாகுபாடுகள் இன்றியும், இதற்காக பல இலட்சக்கணக்கான நிதியினையும் ஒதுக்கீடு செய்தும் வந்தேன்.
இவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு எனக்கு அமைச்சுப் பதவிகள்தான் வேண்டும் என்ற ஒரு என்னப்பாடு ஒருபோதும் தோன்றியது கிடையாது. நான் அமைச்சராக இருந்தாலும் செய்வேன் அமைச்சராக இல்லாவிட்டாலும் நான் செய்வேன் எமது கட்சியும், எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றவுப் ஹக்கீமும் எனக்கு காட்டித்தந்த, கற்றுத்தந்த வழிவகைகளாகும் என்றார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டனதுடன், அதிதிகளாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ரீ.ஆப்தீன், எம்.கலீல், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!