இல‌ங்கையின் இறைமைக்கு ஆப‌த்து என்று பிர‌பா க‌ணேச‌ன் தெரிவித்த க‌ருத்து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து – உலமாக் கட்சி

(பைஷல் இஸ்மாயில், துஷாரா)

ரோஹிங்கிய‌ முஸ்லிம்க‌ள் இல‌ங்கையில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டுவ‌து இல‌ங்கையின் இறைமைக்கு ஆப‌த்து என்ற‌ முன்னாள் பிர‌தி அமைச்ச‌ர் பிர‌பா க‌ணேச‌னின் க‌ருத்து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து என‌்று உல‌மாக் க‌ட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் இன்று (01) கூறினார்.
ரோஹிங்கிய‌ முஸ்லிம்க‌ள் முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ளால் இல‌ங்கைக்கு அழைத்து வ‌ர‌ப்ப‌ட‌வில்லை. அவ்வாறு அழைத்து வ‌ர‌க்கூடிய‌ அறிவோ ப‌ல‌மோ அமைச்ச‌ர்க‌ளிட‌ம் இல்லை. ரோஹிங்கிய‌ முஸ்லிம்க‌ள் வெளிநாடு ஒன்றுக்கு போகும் போது வ‌ழி த‌வ‌றி இங்கு க‌ரை ஒதுங்கிய‌வ‌ர்க‌ள் என்று ந‌ன்கு தெரிந்தும் முஸ்லிம்க‌ளின் விகிதாசார‌த்தை அதிக‌ரிப்ப‌த‌ற்காக‌வே இங்கு அழைத்து வ‌ர‌ப்ப‌டுகிறார்க‌ள் என‌ பிர‌பா க‌ணேச‌ன் கூறியிருப்ப்ப‌து வ‌டி காட்டிய‌ ம‌ட‌த்த‌ன‌மான‌ க‌ருத்தாகும் என‌ உல‌மாக் க‌ட்சி தெரிவிக்கின்றது.
அக்க‌ட்சி மேலும் தெரிவித்த‌தாவ‌து,
இந்தியாவில் இருந்து இல‌ங்கையின் எல்லைக்குள் வ‌ழி த‌வ‌றி வ‌ந்து மீன் பிடிக்கும் த‌மிழ‌ர்க‌ளை இல‌ங்கை அர‌சு சிறைப்பிடித்து இல‌ங்கை சிறையில் வைத்தே அவ‌ர்க‌ளை போஷிக்கிற‌து. இவ்வாறு செய்வ‌து இங்கு த‌மிழ் ம‌க்க‌ள் ப‌ர‌ம்ப‌லுக்காக‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளின் பின்ன‌ணியில் இவ்வாறு ந‌ட‌க்கிற‌து என‌ புத்தியுள்ள‌ எவ‌னும் சொல்ல‌ மாட்டான். அவ்வாறுதான் பிர‌பா க‌ணெச‌னின் க‌ருத்து உள்ள‌து.
ஏற்க‌ன‌வே அக‌திக‌ளாக‌ இல‌ங்கைக்கு வ‌ந்த‌ ரோஹின்யா முஸ்லிம்க‌ள் அனைவ‌ரும் வேறு நாடுக‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டுவிட்டார்க‌ள் என‌ அர‌சு தெளிவாக‌ அறிவித்திருப்ப‌து பிர‌பா க‌ணேச‌னுக்கு தெரியாதா என‌ கேட்கிறோம்.
இல‌ங்கை த‌மிழ் ம‌க்க‌ள் ல‌ட்ச‌க்க‌ண‌க்காணோர் அக‌திக‌ளாக‌ ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் த‌ஞ்ச‌ம‌டைந்த‌  போது அந்நாடுக‌ள் அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், உறையும் ச‌ம்ப‌ள‌மும் வ‌ழ‌ங்கி த‌ம‌து ம‌னிதாபிமான‌த்தை காட்டின‌.
அதே போல் க‌ல்முனை மீன‌வ‌ர்க‌ள் வ‌ழி த‌வ‌றி மாலைதீவு க‌ட‌ல் எல்லைக்கு சென்ற‌ போது மாலைதீவு அர‌சாங்க‌ம் இல‌ங்கை மீன‌வ‌ர்க‌ளை மாத‌க்க‌ண‌த்தில் போஷித்து பின்ன‌ர் இல‌ங்கைக்கு அனுப்பிய‌தெல்லாம் பிர‌பா க‌ணேச‌னுக்கு தெரியாது என்றால் இவ‌ருக்கு ம‌னிதாபிமான‌ம் என்றால் என்ன‌வென்றே தெரியாது என்றே தெரிகிற‌து.
 ஆனால் இல‌ங்கையில் த‌ஞ்ச‌ம‌டைந்த‌ ப‌ர்மா இராணுவ‌த்தால் அனைத்தையும் இழ‌ந்த‌ ப‌ரிதாப‌த்துக்குரிய‌ ம‌க்க‌ள் இங்கு த‌ற்காலிக‌மாக‌ த‌ங்கியிருப்ப‌தை சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் பார்ப்ப‌து போன்று பிர‌பா க‌ணேச‌னும் பார்ப்ப‌து அவ‌ர‌து முஸ்லிம் விரோத‌ இன‌வாத‌ முக‌த்தை காட்டியுள்ள‌து.
இல‌ங்கை முஸ்லிம்க‌ள் த‌ம‌து தொகையை அதிக‌ரிக்க‌ வேண்டுமாயின் த‌மிழ் நாட்டு முஸ்லிம்க‌ள் இங்கு வ‌ந்தாலே போதும். அதைக்கூட‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் விரும்பாம‌ல் நாட்டின் இறைமையை பாதுகாப்ப‌தில் அக்க‌றையுட‌ன் உள்ளார்க‌ள் என்ப‌தை பிர‌பா க‌ணேச‌ன் போன்றோர் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!