இலங்கையிலுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் தாக்குதல்

கல்கிசையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகத்தினால் நடத்தப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்க வைக்கட்டிருந்த வீடு சிங்கஹலே ஜாதிக பல முலு அமைப்பு உட்பட கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் இன்று தாக்குதலுக்கு உள்ளானது.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி காங்கேசந்துறையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளில் 7 பெண்களும் 16 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
சிங்கள கடுமபோக்குவாதிகள் அகதிகள் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி வளைத்து ரோஹிங்கிய பயங்கரவாதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பௌத்தர்களை கொன்றுகுவிக்கும் பயங்கரவாதிகள் இங்கிருப்பதாக கூறி அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
ஸ்தலத்துக்கு விஜயம் செய்த பொலிஸார் அங்கிருந்த அகதிகளை கல்கிஸை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தங்க வைக்கப்பட்டிருப்பது ஐ.நா. அகதிகள் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டிலே என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின் ரோஹிங்கிய அகதிகள் இந்த வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இத் தகவல் அறிந்ததும் சற்றுமுன்னர் நூற்றுக்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மற்றும் கடும் போக்காளர்கள் அங்கு வருகைதந்து உடனடியாக அகதிகளை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்தினர் வீட்டின்மீது கற்களை எறிந்து தாக்கினர். நிலைமை மோசமாவதை அவதானித்த பொலிஸார் காலி வீதியின் ஒரு பகுதியை மூடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டனர். அகதிகளை பொலிஸார் அங்கிருந்து அழைத்துச் சென்றதன் பின் கலகக்காரர்கள் வெளியேறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!