அதிகாரிகளும் அதன் பணிப்பாளரும் சிறந்த முறையில் மக்கள் நலன் கருதி செயற்பாட்டல் மாகாணத்தில் உள்ள இடர்பாடுகள் குறையும் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

(பைஷல் இஸ்மாயில் )

கிழக்கு மாகாண திட்டமிடல் பிரிவில் இயங்கும் சில அதிகாரிகளும் அதன் பணிப்பாளரும் சிறந்த முறையில் மக்கள் நலன் கருதி செயற்பாட்டல் மாகாணத்தில் உள்ள இடர்பாடுகள் குறையும் அத்துடன் மாகாணத்தின் உள்ள அதிகாரிகள் இனப்பாகுபாடு இல்லாத முறையில் செயற்படுவார்கள் என்றால் மக்களுக்கான சேவைகளை சரியாக செய்ய முடியும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் அயராத முயற்சியிலும் அவரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சம்மாந்துறையை ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 11.9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், சுகாதார பிரதியமைச்சர் பைஷால் காசீம் அவர்களினா ஒதுக்கப்பட்ட 10மில்லியன் நிதியில் அமைக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடந்தும் கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்திற்கான நிதிகளை வைத்தியசாலைக்கு ஒதுக்குவதில் திட்டமிடல் பிரிவில் அதிகாரிகள் இன வேறுபாடு பார்த்து நிதிகளை புறக்கணித்தாதால் எவ்வாறு இன ஒற்றுமை உருவாகும் என கேள்வி எழுகின்றது. எனவே அதிகாரிகள் ஒற்றுமையுடன் செயற்பட்டு சிறந்த முறையில் திட்டமிட்டு நிதிகளை ஒதுக்க வேண்டும் அதற்காக அதிகாரிகள் பொடுபோக்காக செயற்படக்கூடாது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை நாம் தரமுயர்த்துவதற்காக பலமுறையில் செயற்பட்டு வந்து பலவகையான ஆவனங்களையும் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளோம் ஆகவே விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் அது விரைவில் செயற்படுத்தப்படும் – என்றார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மத்திய சுகாதார அமைச்சின் பிரதியமைச்சர் பைஷல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல். மாஹீர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எ.சி.எம். அன்சார் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!