அக்கரைப்பற்றில் “மரம் வளர்த்த மண்” அபிவிருத்தி திட்டம்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (15) நடைபெற்ற “மரம் வளர்த்த மண்” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயம் (பெண்கள் பாடசாலை) மற்றும் சம்சுல் உலூம் வித்தியாலயம் என்பன இன்று தரமுயர்த்தப்பட்டன. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சீ. தண்டாயுதபானி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!