மியன்மாரை கண்டிக்க இந்த நல்லாட்சிக்கு மனமில்லையா? – கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பைஷல்

முஸ்லிம் தலைவர்கள் பல கோரிக்கைகளை விடுத்தும்  மியன்மாரை கண்டிக்க இந்த நல்லாட்சிக்கு மனமில்லையா? என்று அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.முஹம்மட் பைஷல் உரையாற்றும்போது மேற்கண்ட கேள்வியை தொடுத்து பேசினார்.

அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராம இளைஞர், யுவதிகளுக்கான ஒன்று கூடல் இன்று (11) குறித்த பிரிவில் இடம்பெற்றபோது இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஒரு அரசானது இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் செயற்பட வேண்டும். பல விடயங்களில் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கைகள், கண்டனங்களை தெரிவிக்கும் இலங்கை அரசானது முஸ்லிம்கள் பாதிக்கப்படும் விடயமேதும் என்றால் தூர நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது ஒரு மன வேதனையளிக்கின்றது.

இந்த நல்லாட்சி அரசை கொண்டுவர அரும் பாடுபட்ட மக்களின் குரலை இதுவரை இந்த நல்லாட்சியரசி செவிமடுக்காமலும், கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதுபோல் அவர்களின் செயற்பாடுகள் அமைந்து காணப்படுகின்றன.

இவைதானா இந்த நல்லாட்சி அரசிக்கான ஆட்சிமுறை? இனிமேலும் இந்த நல்லாட்சி அரசி இவ்வாறு அமைதி காக்குமானால் இந்த நல்லாட்சி அரசிக்கு நல்ல பாடம் புகட்ட இளைஞர்களாகிய நாம் முன்னின்று செயற்பட அணிதிரளவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!