45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக “சுறக்ஸா” காப்புறுதி திட்டம்

நாட்டின் 45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக “சுறக்ஸா” காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலவசக்கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் விசேட பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் தற்போதைய காலத்திற்கு ஏற்றவகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!