க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2016 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2016 ஆம் ஆண்டின் பெறுபேறுகள் தற்பொழுது பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk  இற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம்6 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளே இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இப்பெறுபேறுகளை கையடக்கத் தொலைபேசிகளில் EXAMS என ரைப் செய்து ஒரு இடைவெளி விட்டு Index Number ஐ ரைப் செய்து,

Airtel எனில் 7545

Dialog எனில் 7777
Mobitel எனில் 8884
Etisalat எனில் 3926
Hutch எனில் 8888 என்ற இலக்கத்திற்கும் SMS செய்து அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலய பாடசாலைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று  பரீட்சைத் திணைக்கள பெறுபேறுகள் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடசாலைகளின் பெறுபேறுகள் இன்று தபாலிடப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!