ஓர் ஆலிமின் மறைவு ஆலத்தின் இழப்பாகும் –        முன்னாள் அமைச்சர் அஸ்வர்

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஓர் ஆலிமின் மறைவு ஆலத்தின் இழப்பாகும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையின் பிரபல உலமாவாகத் திகழ்ந்த, சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் தலைவருமான  கற்றறிந்த  உலமா சேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மர்ஹும் அலியார் ஹஸரத் 1958 ஆம் ஆண்டிலில்தான் எனக்கு அறிமுகமானார். அன்று இந்நாட்டில் அரும்பெரும் தலைவர்களாகத் திகழ்ந்த டாக்டர் ரீ.பி.ஜாயா, டாக்டர் எம். சீ.எம். கலீல் ஆகியோர்களோடு சம்மாந்துறை சென்று பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது  அவரை முதல் முதலில் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி முற்றவெளியில் நடைபெற்ற கூட்டத்தில் சந்தித்தேன் என்பதை இன்று நான் மீட்டிப் பார்க்கின்றேன்.

எனவே இன்று உலமாக்களுடைய சிறப்பை நாம் பேண வேண்டும். அண்மைக்காலத்தில் பலர் எம்மிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் விட்ட இடத்தை நிரப்பக் கூடிய பல தகைமைமிக்க உலமாக்கள் இந்த நாட்டிலே உருவாக வேண்டும். அதன் மூலம் சமயத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் நற்பெயர் கிடைக்க வேண்டுமென நான் துஆச் செய்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய குடும்பத்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் மத்ரஸாவைச் சேர்ந்தவர்களுக்கும் அழகிய பொறுமையை அளித்து, அன்னாருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்தை வழங்குவானாக!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!