”ஷேகுத் தப்லீக்” மௌலவி எம்.பி.எம். அலியார் ஹஸரத் (தேவ்பந்த்)  அவர்களின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

(எம்.சி. அன்சார்)

பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும்சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் கண்ணியத்திற்குரிய அமீரும்சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகராகவும்,  சம்மாந்துறை மக்களின் கண்ணியத்துக்குரியவராகவும் இருந்த   மூத்த உலமா சங்கைக்குரிய ஷேகுத் தப்லீக் மௌலவி எம்.பி.எம்அலியார் ஹஸரத் (தேவ்பந்த்)  அவர்களின் ஜனாஸா நேற்று சனிக்கிழமை(19) இரவு 10 மணியளவில் சம்மாந்துறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் ஜனாஸா பொதுமக்களின் பார்வைக்காக சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லுரி மண்டபத்தில் வைக்கப்பட்டு,சம்மாந்துறை பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜனாஸா தொழுகையையும்நல்லடக்க இரங்கல் நிகழ்வினையடுத்து மஸ்ஜிதுல் தக்கிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷூறா, ஜம்இயத்துல் உலமா ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நல்லடக்க இரங்கல் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவுப் ஹக்கீம், இராஜங்க அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், ஆரிப் சம்சுதீன், அரபு நாட்டு பிரமுகவர்கள், அகில இலங்கையிலிருந்து மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், அரசியல் பிரமுகவர்கள், அரபு கல்லாரி மாணவர்கள், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இவரின் மறைவையொட்டி சம்மாந்துறையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் சம்மாந்துறை எங்கும் சோகம் நிறைந்து காணப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்த அலியார் ஹஸரத்த்தின் மறுமைப் பயணம் சம்மாந்துறை மண்ணிலிருந்து ஆரம்பமாகிறது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!