எமது பிள்ளைகளின் சிந்தனை தாய்மொழி தமிழ்மொழி மூலமாகவே வளரும்.

(துறையூர் தாஸன்)

இன்றைய உலகமயமாக்கல் இயந்திரச் சூழலில்,
பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளின் மீது கவனத்தை செலுத்துபவர்களாக அவர்களின் உள வளர்ச்சியினை அறிபவர்களாக இருக்க வேண்டும் என கல்முனை வலயக் கல்வி,உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம்.பிர்தெளஸ் தெரிவித்தார்.

சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மருதமுனை HOUSE OF ENGLISH முன்பள்ளி பிள்ளைப் பருவ பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,எங்களுடைய பிள்ளைகளின் மூளைகள் அதிவேகமாக வளர்ச்சியடைகின்ற காலப்பகுதி முன்பிள்ளைப் பருவத்திலேயாகும்.எதிர்காலத்திலே அவர்கள் வாழ்வதற்குரிய முழுமையான வளர்ச்சி இப்பருவத்திலேயே அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

முன்பிள்ளைப் பருவத்திலேயே தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூம்மொழிகளையும் கற்க,வழிவகை செய்பவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டும்.
என்னை நானாகவே இருக்கவிடுங்கள்,என் தலைவிதியை என்னையே நிர்ணயிக்க விடுங்கள் என்று குழந்தைகள் சொல்லுகிறார்கள்.அவர்களை அவர்களாகவே இருக்க விட வேண்டும்.அவர்களுடைய உள்ளங்களிலே இருக்கின்ற உள்ளக ஆற்றல்களை வெளிக்கொணர்கின்ற பாரிய பொறுப்பு பாடசாலைகளுக்கு இருக்க  வேண்டும்.அதற்கான சூழலை வசதிகளை தேவைகளை பாடசாலை அமைத்துக்கொடுக்க வேண்டும்.அப்போதுதான் அவர்களது திறமைகளை,சிந்தனையாற்றல்களை எம்மால் கண்டு கொள்ள முடியும்.
பெற்றோரும் சமூகமும் ஆசிரியரும் இணைந்தால் மாத்திரமே எங்களுடைய குழந்தைகள் நாளை முன்னேறி உயர்ந்து வருவார்கள்.

எங்களுடைய பிள்ளைகளுக்கு என்னதான் பன்மொழிகளை கற்பித்தாலும் அவர்களுடைய சிந்தனை தாய்மொழி தமிழ்மொழி மூலமாகத்தான் வளரும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.தாய்மொழி தமிழ்மொழி மூலமாகவே அவர்களது சிந்தனையாற்றல்,கண்டுபிடிப்பு மேலேழுந்து வளர்ந்து வருகின்றது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!