ஜனநாயகத்தை குழி தோன்றிப் புதைக்க தேர்தல் ஒத்திவைப்பு: முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபனை –        அஸ்வர் கண்டனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மாகாண சபைத் தேர்தலை ஒத்திப் போடுவது ஜனநாயகத்தை குழிதோன்றிப் புதைக்கும் செயற்பாடு என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அவர் தெரிவித்தார்.

இன்று காலை (10) கொழும்பு என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இப்போது முஸ்லிம்கள் சம்பந்தமாக முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு முழு நாட்டிலும் எதிர்ப்புக் கணத்துக் கொண்டு வருகின்றது. வர்த்தகத்திலே மிகவும் கஷ்டப்படும் முஸ்லிம்களுக்கு மாணிக்கக்கல் வியாபாரத்துக்கும் பாரிய அடி விழுந்துள்ளது. மாணிக்கக் கல் ஏற்றுமதிக்கு 16 சதவீதம் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக அடிமேல் அடிவிழுவது மாத்திரமல்ல, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான சிங்கள மக்களுடைய குடும்பங்களும் இதனால் அவதியுறப் போகின்றார்கள். எனவேதான் இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இந்த அரசாங்கம் பலவாறும் வேஷம் பூண்டு மேடையில் ஏறி ஆட்டம் ஆடத் துவங்கியுள்ளது.

அவர்களுடைய புதிய விடயம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திப் போடுவது. இதனையும் முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஜனநாயகத்தைப் பேணவேண்டுமென்றால் இந்த அரசாங்கம் இதனைச் செய்ய முடியாது. ஜனநாயகத்தின் அழிவுக்குரிய முதல் உண்மையான சமிக்ஜைதான் இதனை ஒத்திப் போடுவதற்கு எத்தனிப்பது.

இதற்கு விரோதமாக முழுநாடும் கலந்திருக்கின்ற முஸ்லிம்கள் விரோதமாக இருக்கின்றார்கள். முஸ்லிம்களுடைய பெரும் கண்டனத்தைத் தெரிவிப்பதற்காக வேண்டி ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துமாறு அவர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!