ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

(துறையூர் தாஸன்)

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அடிப்படை உரிமைகள்,சதந்திரம் தொடர்பான வலுவூட்டல் செயலமர்வு
அக்ரட், சொண்ட்,மற்றும்  சட்டத்தரணிகள்  சங்கத்தினால் ஒழங்குபடுத்தப்பட்டு,சட்டத்தரணிகள் சங்கத்தின் உத்தியோகத்தர் செல்வி.சொ.சரண்யா,கடந்த இருநாட்களாக ஹொட்டல்  விறீச்வியுவில் இடம்பெற்றது.

மாவட்ட ரீதியிலுள்ள ஊடக வியலாளர்களுக்கான நெறிசார் அறிக்கையிடல் தொடர்பான விழிப்புணர்வு  செயலமர்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார மொழித்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா,மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர் க.சிறிஸ்குமார்,சட்டத்தரணி ஹாசன் ருஷ்தி மற்றும் சட்ட உதவிகள் ஆணைக்குழு சட்டத்தரணி சில்விக்ஸ் மிருதினி ஆகியோர்கள் வளவாளராக இதன்போது கலந்து கொண்டனர்.

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பத்திரிகையாசிரியர் சங்கத்தின் செய்தி ஆசிரியர்களுக்கான தொழில் நடைமுறைக்கோவை, ஊடகவியலாளர்களின் உரிமையும் பாதுகாப்பும், ஊடகவியலாளர்களின் தகைமையாற்றல் இயல்புகள் தொடர்பாகவும்,ஊடகவியலாளர்களின் ஊடக செயற்பாடு சார்ந்தும் ஊடகவியலாளர்களுக்குரிய அடிப்படை கொள்கை தொடர்பாகவும் ஊடகம் எவ்வாறு இயங்க வேண்டும்,ஊடக சட்டம் மற்றும் தகவல் அறியும் உரிமை,மனித உரிமை தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!