கல்விக்கு உதவுவதே மிகப் பெரும் உதவி: வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். செளதுல் நஜீம்

(துறையூர் தாஸன்)

வசதி குறைவான ஏழை எளிய மாணவர்களின் கல்வி அவிருத்திக்கு உதவுபவர்களாக இருப்பதுடன் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் இல்லாமல் பாடசாலைக்கு வராத மாணவர்களையும் கல்விப்புலத்திலே நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது என சம்மாந்துறை வலயக்கல்ல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.செளதுல் நஜீம் தெரிவித்தார்.

அலிஸ் கலையிலக்கிய சமூக சேவை நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில்,மருதமுனை றூகி புத்தக நிலையத்தால்,மட்டு அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா,அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் தலைமைப்பீட கனக்காளர் ஏ.எம்.அமீன் உட்பட அதிதிகள் பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்துகின்ற பாடசாலைகளை அபிவிருத்தி செய்கின்ற செயற்பாடுகளுக்கு கல்விப்புலத்திலேயிருந்து வலயக்கல்விப் பணிமனையில் இருந்து என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்.

கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளிலே நீங்கள் திறமையான செயற்பாடுகளை காட்டி பரீட்சைகளில் உன்னதமான பெறுபேறுகளை பெற்று நல்ல நிலையில் இருக்கும்போது கற்றல் கற்பித்தல் தேவையுடைய மாணவர்களுக்கு உதவக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

கல்வியலே ஒருவரை உயர்த்தி விட்டோமானால் வேற ஒன்றும் அவருக்கு தேவையில்லை.உதவிகளுள் கல்விக்கு உதவுவதே மிகப்பெரும் உதவியாக இருக்கிறது.மாணவர்களின் கல்வி எழுச்சிக்காக ஒவ்வொரு நிறுவனங்களும் ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும்.
புனித றமழான் நோன்புக் காலகட்டங்களிலே நிறைந்த தான தர்மங்களை செய்பவர்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!