உயிர்முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவில் 8 மாணவர்கள் சம்மாந்துறை தேசிய பாடசாலையிருந்து தெரிவு

(எஸ்.எல்.சலீம்)
2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை எழுத கிடைக்கப்பெற்ற பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடிப்படையில் உயிர்முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் அதி கூடுதலான மாணவர்களின் 8 மாணவர்கள் சம்மாந்துறை தேசிய பாடசாலையிருந்து தெரிவாகியுள்ளனர். இம்மாணவர்கள் பெயர்கள் பின்வருமாறு. கே.பஸ்மியா,எப். எப்.இப்த்தா, எஸ்.எப். முர்ஸித்தா, ஏ.எல்.உஸ்னா,எம்.என். நிப்றா, எம்.ஏ. அஸ்மியா பானு, எஸ்.எல்.எப். றுஸ்னி ஆகிய மாணவர்களை கல்லூரியின் அதிபர் ஏ.சி.எம். இஸ்மாயில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அருகில் உயிர்தொழில்நுட்ப பாட ஆசிரியர் ஏ.எம்.ஏ. கரீம், ஆசிரியர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம். இதன்போது இம் மாணவர்களின் வெற்றியில் அரும்பணியாற்றிய மாற்றுமொரு ஆசிரியர் பௌஸானுக்கும் அதிபர் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!