சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இயத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷூறா ஆகியவற்றினால் சேகரிக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள அரிசி பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன

(எம்.சி. அன்சார் – சம்மாந்துறை)

நாட்டில் நிலவி வரும் இயற்கை அனர்த்தத்தின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள தென்பகுதி  மக்களுக்கு வழங்கவென சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இயத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷூறா ஆகியவற்றினால் சேகரிக்கப்பட்ட ஒருதொகை அரிசி  பொதிகள் நேற்று (30) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து  வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட 400 அரிசிப்பொதிகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம்.கே.எம். முஸ்தபா ஆகியோர் இணைந்து  சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பிரியலாலிடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர், மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் தவிசாளர் ஐ.ஏ. ஜப்பார், நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!