மழையுடன் கூடிய காலநிலை: அவசர நிலைமைகளில் 117 இற்கு அழைக்கவும்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதன் காரணமாக குறித்த ஆற்றங்கரைகளுக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்படவும்.

குறிப்பாக, களனி கங்கையின் க்ளேன் கோஸ் பிரதேசத்திலும், களு கங்கையின் இரத்தினபுரி பிரதேசத்திலும், கிங் கங்கையின் பத்தேகம பிரதேசத்திலும் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதான பாதைகள் தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!