முஸ்லிம் காங்கிரஸின் இரு நூல்கள் வெளியீடு

(பிறவ்ஸ்)
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நினைவுமலர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாதாந்த சஞ்சிகையான “சாட்சியம்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 24ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4:15 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொழும்பு கோள் மண்டலத்துக்கு முன்னால் அமைந்துள்ள மேல் மாகாண அழகியல் கலையரங்க கேட்போர்கூடத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அன்றைதினம் இரு நூல்களும் ஒளி, ஒலி வடிவில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா குறித்து சிறப்புரையாற்றவுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருகின்ற அபிவிருத்திகள் உள்ளடங்கிய செயற்பாடுகளை தொகுத்து வழங்கும்  “சாட்சியம்” எனும் மாதாந்த சஞ்சிகையும் அன்றைதினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. அத்துடன் மீள வடிவமைக்கப்பட்ட கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகள், உயர்பீட உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேரு தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!